5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்

வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ். இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

5,000 ரூபாய் கொடுப்பனவு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவை இரத்து செய்யவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ். இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கு, இந்த கொடுப்பனவுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT