நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் விபத்தில் உயிரிழப்பு

சந்திவெளி மற்றும் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் 4 வயது சிறுமி மற்றும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் விபத்தில் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

சந்திவெளி மற்றும் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் 4 வயது சிறுமி மற்றும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடதுபுறத்தில் உள்ள மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வேனின் சாரதி, அவரது மகள் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

படுகாயமடைந்த மனைவி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 54 வயதுடையவர் எனவும் உயிரிழந்த சிறுமி 04 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆனமடுவவிலிருந்து கல்கமுவ நோக்கிச் சென்ற வேன், முன்னால் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த தம்பதியினர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 46 வயதுடைய மஹாநன்னேரிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT