கடலில் விழுந்த 17 கொள்கலன்கள்: மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

கடலில் தற்போதுள்ள நீரோட்டத்தின் தன்மை காரணமாக, இந்தக் காலியான கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரைப் பகுதிகளை நோக்கி மிதந்து வர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் விழுந்த 17 கொள்கலன்கள்: மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு துறைமுகத்துக்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் இன்று சனிக்கிழமை (01) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விபத்து வட அட்சரேகை 06°54′ மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079°32′ ஆகிய ஆள்கூறுகளுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடலில் தற்போதுள்ள நீரோட்டத்தின் தன்மை காரணமாக, இந்தக் காலியான கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரைப் பகுதிகளை நோக்கி மிதந்து வர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்து நெடுநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகள் மிகவும் அவதானமாகவும், மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடலில் மிதந்து வரும் இந்தக் கொள்கலன்களைக் காண நேரிட்டால், அது குறித்து உடனடியாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்துக்கோ (Radio Communication Centre) அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் இந்த விபத்து குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT