அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் பசில்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று (20) நாடு திரும்பியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் பசில்
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று (20) நாடு திரும்பியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னர், பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பசில் ராஜபக்ஷவின் வருகையை தொடர்ந்து எதிர்வரும் தேர்தலுக்கான தமது கட்சியின் திட்டங்களை விரைவில் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பது பசில் ராஜபக்ஷவின் கடமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

இதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT