பிறந்தநாளில் தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.

பிறந்தநாளில் தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் அடுத்த வாரத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அதில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT