ட்விட்டரில் புதிய மாற்றங்கள்

ட்விட்டரின் புதிய முதலாளி அதில் அதிரடியான புதிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.

ட்விட்டரில் புதிய மாற்றங்கள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நவீன உலகில் ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்திற்கும் தனித்தனியாகச் செயலிகள் வந்துவிட்டன, எல்லாம் இணையத்திலேயே எளிமையாக முடிந்துவிடுகிறது. இதனால் பலரும் இணையதளங்களையே நம்பி உள்ளனர்.

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியபிறகு அதிரடியான அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அதில்‛‛ப்ளூ டிக்கிற்கு' இனி மாதம் 8 அமெரிக்க டொலர் கட்டணம் வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் பதிவிட்ட சில ட்வீட்களில், ‛‛ப்ளூடிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

மேலும் நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஆடியோவை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படும். அதோடு விளம்பங்கள் பாதியாக குறைக்கப்படும்'' என தெரிவித்தார்.

இந்தநிலையில், எலான் மாஸ் ஞாயிற்றுக்கிழமை காலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ட்விட்டரில் நீண்ட வடிவிலான செய்தியை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ட்விட்டரின் பயனரின் உரையில் பல மாற்றங்கள் இருக்கும் என பட்டியலிட்டுள்ளார், அது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பின்தொடரும் ட்வீட்களுக்கு இடையில் செல்ல வலது/இடதுபுறம் எளிதாக ஸ்வைப் செய்யவும். இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.

ஆனால், நீண்ட பதிவுகளை வெளியிட அனுமதி வழங்கினால் ட்விட்டருக்கான தனித்தன்மை என்பது இல்லாமல் போய் விடும் என பலர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT