கொரிய மொழித் திறன் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது கொரிய மொழித் தேர்ச்சித் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

கொரிய மொழித் திறன் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
ADVERTISEMENT
ADVERTISEMENT

2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது கொரிய மொழித் தேர்ச்சித் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்த பரீட்சை பெறுபேறுகள் www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உற்பத்தித் துறை தொடர்பான 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆறாவது கொரிய மொழித் தேர்ச்சித் தேர்வின் இரண்டாம் கட்டத்தில் 3,950 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு 24,378 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்த போதிலும், 18,269 பரீட்சார்த்திகளே பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT