டிக்டொக் வீடியோவுக்காக தோணியில் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியிக்கு சீலாமுனைப்பகுதியிலிருந்து ஆறு இளைஞர்கள் தோணி ஊடாக வந்துள்ளனர்.

டிக்டொக் வீடியோவுக்காக தோணியில் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

டிக்டொக் செய்வதற்காக தோணியில் சென்றபோது மட்டக்களப்பு - நாவலடி பகுதியில் வாவிப்பகுதியில் தோணி கவிழ்ந்ததில் இருவர் நீரில் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியிக்கு சீலாமுனைப்பகுதியிலிருந்து ஆறு இளைஞர்கள் தோணி ஊடாக வந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அப்பகுதியில் டிக்டொக் செய்துவிட்டு தோணியில் மீண்டும் சீலாமுனைக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது தோணி கவிழ்ந்துள்ளது.

இதன்போது இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் பிரதேச மக்களினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், மட்டக்களப்பு சீலாமுனைப்பகுதியை சேர்ந்த 19 வயதுடைய தவசீலன் கிருஸாந்த்,மாமாங்கம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பிரபாகரன் பிருஜனன் ஆகியோர் வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய இளைஞர்களை மீனவர்களும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளதுடன் சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT