தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உலகின் மிகப்பெரிய எலி 

ஸ்லோவாக்கிய நாட்டில் உள்ள மிருகக்காட்சிசாலையிலிருந்து உலகின் மிகப்பெரிய எலிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உலகின் மிகப்பெரிய எலி 
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஸ்லோவாக்கிய நாட்டில் உள்ள மிருகக்காட்சிசாலையிலிருந்து உலகின் மிகப்பெரிய எலிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இரண்டு ஜோடி Capybara எலிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த விலங்குகள் தெஹிவளை மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப் பெரிய கொறித்துண்ணிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த விலங்குகள் மிகவும் நட்புடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தண்ணீருக்கு அருகில் வசிக்கும் இந்த Capybara நீருக்கடியில் சுமார் ஐந்து நிமிடங்கள் சுவாசிக்கும் திறன் கொண்டது என்றும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் படி இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு இவை கிடைக்கப்பெற்றன. ஒரு மாத தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு அவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT