ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த மார்ச் மாதம் 22 தொடங்கிய 17-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்த தொடரில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றுகளின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இதனையடுத்து இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

நேற்று மாலை பெய்த மழை காரணமாக கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அவ்வாறு ஒருவேளை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

இன்று முழுவதும் மழை பெய்து ஒரு ஓவர் கூட வீசப்படாமல் போனால் நாளை ரிசர்வ் டேவிற்கு போட்டி தள்ளி வைக்கப்படும். ஒருவேளை நாளை ரிசர்வ் டேவிலும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இறுதிப்போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதோடு விதிமுறைப்படி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணியே சாம்பியனாக அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்பட்டால் கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT