தோனியை பின்பற்றினேன்.. என் அதிரடிக்கு காரணம் சங்கக்கார.. பட்லர் நெகிழ்ச்சி!

சிறப்பாக விளையாடிய பட்லர் 60 பந்துகளில் 6 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 107 ரன்களை விளாசினார். 

தோனியை பின்பற்றினேன்.. என் அதிரடிக்கு காரணம் சங்கக்கார.. பட்லர் நெகிழ்ச்சி!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. 

கடைசி 6 ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 96 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், கடைசி வரை களத்தில் நின்று பட்லர் அதிரடியாக ஆட்டத்தை முடித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

சிறப்பாக விளையாடிய பட்லர் 60 பந்துகளில் 6 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 107 ரன்களை விளாசினார். 

ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்ட பட்லர் பேசும் போது, “எந்த சூழலிலும் நம்பிக்கையை கைவிடக்கூடாது. அதுதான் என் ஆட்டத்திற்கு பின் இருந்த முக்கிய அம்சம். ஐபிஎல் தொடரில் சரியாக பந்தை அடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன்.

எப்போதெல்லாம் என் மனதில் நெகட்டிவ் எண்ணங்கள் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் நேர் எதிராக பாசிட்டிவாக சிந்திக்க தொடங்கிவிடுகிறேன். அதுதான் என்னை ஓட வைக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐபிஎல் தொடரில் தோனி, விராட் கோலி போன்றவர்கள் கடைசி வரை களத்தில் நம்பிக்கையுடன் விளையாடி ஆட்டத்தை வெல்வார்கள். அதனை எண்ணற்ற முறை பார்த்திருக்கிறோம். அதனை தான் இன்று செய்திருக்கிறேன். 

பயிற்சியாளர் சங்கக்காரா என்னிடம் பிரேக்கிங் பாய்ண்ட் பற்றி பேசி இருக்கிறார். களத்தில் நீண்ட நேரம் செலவிடும் போது, அது நிச்சயம் மாறிவிடும் என்றார். ஒரேயொரு ஷாட் கூட நமது ஃபார்மை மீட்டெடுக்கும் என்றார். 

சங்கக்காராவின் வார்த்தைகள் கடந்த சில ஆண்டுகளாக எனது ஆட்டத்தின் முக்கிய பகுதியாக உள்ளது” என்றார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT