யுவதிக்கு ஆபாச படங்களை அனுப்பிய கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட நிலை

தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

நவம்பர் 17, 2023 - 18:33
யுவதிக்கு ஆபாச படங்களை அனுப்பிய கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட நிலை

தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள ஐஸ் கிறீம் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது அலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் அலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 

இந்த நிலையில், இது தொடர்பில் அந்த யுவதியால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்பின்னர் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கடை உரிமையாளரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில்  வியாழக்கிழமை (16) முற்படுத்தினர். 

வழக்கினை விசாரித்த நீதவான் , கடை உரிமையாளரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!