இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான விஜய் தொலைக்காட்சி பிரியங்கா..!
பிரியங்காவின் காமெடி கலந்த பேச்சுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் பிரியங்கா, கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பிரியங்காவின் காமெடி கலந்த பேச்சுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா ஒரு சில ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்து அம்மா மற்றும் சகோதரர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், தொகுப்பாளனி பிரியங்கா குறித்து ஒரு செய்தி தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, பிரியங்கா பிரவீனை விவாகரத்து செய்துவிட்டதாகவும், அவரது அம்மாவின் அறிவுறுத்தலின் பேரில் மறுமணம் செய்து கொள்ள சம்மதித்ததாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பிரியங்கா சீரியல் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையதளத்தில் பரவி வருகிறது.
இப்படி இணையதளத்தில் பரவும் செய்தியில், எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.