முடிவுக்கு வரவுள்ள விஜய் டி.வி-யில் கலக்கிய சூப்பர் ஹிட் சீரியல்

விஜய் டிவியில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் சீரியல்கள் தொடங்கப்பட்டு ஒரு கட்டத்தில் அதிக எண்ணிக்கையில் சீரியல்களின் ஆதிக்கம் அதிகரித்தது. 

முடிவுக்கு வரவுள்ள விஜய் டி.வி-யில் கலக்கிய சூப்பர் ஹிட் சீரியல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற புதிய சீரியல் தொடங்கப்பட உள்ளதால், டி.ஆர்.பி.யில் கலக்கிய பாரதி கண்ணம்மா சீரியலின் 2 வது சீசனுக்கு டாட்டா காட்டி முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் சீரியல்கள் தொடங்கப்பட்டு ஒரு கட்டத்தில் அதிக எண்ணிக்கையில் சீரியல்களின் ஆதிக்கம் அதிகரித்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது, விஜய் டிவியில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்ற்ன. இதில் நிறைய சீரியல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சில தொடர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.

இந்த சூழலில்தான், விஜய் டிவியில் கிழக்கு வாசல், என்ற சீரியல் விரைவில் தொடங்க உள்ளதாக புரோமோ ஒளிபரப்பாகி கவனம் பெற்று வருகிறது. 

இந்த சீரியலில், ரேஷ்மா, சஞ்சீவ், விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த சீரியலை ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆனால், விஜய் டிவியில் இரவு நேரத்தில் எல்லா சீரியல்களும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது, எந்த சீரியலைத் தூக்கிவிட்டு கிழக்கு வாசல் சீரியலை ஒளிபரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் இருந்தது.

விஜய் டிவியில் டி.ஆர்.பி-யில் சூப்பர் ஹிட் அடித்த சீரியல் எது என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் என்பதே பலரின் பதிலாக இருக்கும். 

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை வைத்து, பாரதி கண்ணம்மா 2 சீரியல் சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த சீரியல் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறாததால், விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், டி.ஆர்.பி-யில் பின்தங்கி இருக்கும் பாரதி கண்ணம்மா 2 சீரியலை முடித்துவிட்டு கிழக்கு வாசல் சீரியலை ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT