விஜய் அம்மா வெளியிட்ட Just Looking like a wow.. ரீல்ஸ் வீடியோ!

10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். நண்பர்கள், இன்னிசை மழை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

டிசம்பர் 11, 2023 - 22:10
டிசம்பர் 11, 2023 - 22:14
விஜய் அம்மா வெளியிட்ட Just Looking like a wow.. ரீல்ஸ் வீடியோ!

நடிகர் விஜய் 30 ஆண்டுகளை கடந்து சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.  விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாடகி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவராக இருந்துள்ளார். 

முன்னதாக இசைக்குழுக்களில் பாடிக் கொண்டிருந்த இவர் திரைப்படங்களிலும் பாடத்துவங்கினார். சில கதைகளையும் இவர் எழுதியுள்ளார். தன்னுடைய கணவரின் இயக்கத்தில் வெளியான படங்களில் இவர் பாடல்களை பாயுள்ளார். 

10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். நண்பர்கள்,இன்னிசை மழை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது தன்னுடைய மகன் குறித்த பேட்டிகளை அடிக்கடி கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் விஜய்யை அவ்வப்போது இவர் சந்திக்கும் வீடியோக்கள், புகைப்படங்களும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன. 

இதனிடையே தற்போது ஷோபா சந்திரசேகர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையதளத்தில் ட்ரெண்டாகியுள்ளன. சமீபத்தில் ட்ரெண்டாகியுள்ள So Beautiful, so elegant, just looking like a WOW என்ற வீடியோவிற்குதான் தற்போது ஷோபா சந்திரசேகர் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Sonia Vikram (@sonia.vikram)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!