கழிவு நீர் குழியில் விழுந்து  இரு தொழிலாளர்கள் பலி

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, கழிவு நீர் வௌியேற்றும் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கழிவு நீர் குழியில் விழுந்து  இரு தொழிலாளர்கள் பலி
மாதிரி படம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, கழிவு நீர் வௌியேற்றும் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (27) பிற்பகல் கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கழிவு நீர் வௌியேற்றும் குழியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் குறித்த குழியில் விழுந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பின்னர் அவரை காப்பாற்ற மற்றைய நபரும் கழிவு நீர் வௌியேற்றும் குழியில் இறங்கிய வேளை, அவரும் கழிவு நீர் வௌியேற்றும் குழியில் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபத்தான நிலையில் கழிவு நீர் வௌியேற்றும் குழியில் விழுந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT