பின்வாங்கினார் டிரம்ப்? : ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்கள் ஒத்திவைப்பு - உலகப் பொருளாதாரம் தப்புமா?

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார்.

பின்வாங்கினார் டிரம்ப்? : ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்கள் ஒத்திவைப்பு - உலகப் பொருளாதாரம் தப்புமா?
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் நடத்திய சமீபத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் நம்பிக்கையூட்டும் வகையிலும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ராணுவத் தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்க அவர் உத்தரவிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மார்ச் 23, 2026 அன்று வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை தற்காலிகமாகத் தணிக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த ஐந்து நாட்கள் அவகாசத்திற்குள் சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரமாகும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

மறுபுறம், இந்த போர் நீடித்தால் உலகப் பொருளாதாரம் மீள முடியாத பெரும் அச்சுறுத்தலைச் சந்திக்கும் என சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் பாத்தி பிரோல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய மேற்கு ஆசிய நெருக்கடியானது 1970-களில் ஏற்பட்ட இருமுறை எண்ணெய் விலை அதிர்வுகளையும், ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட எரிவாயு சந்தை பாதிப்புகளையும் விட மிகக் கடுமையானது எனக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தப் போரின் தாக்கம் தொடர்ந்து நீடித்தால் எந்தவொரு நாடும் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது என்பது உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், லெபனான் எல்லையில் இஸ்ரேல் தனது தரைப்படைத் தாக்குதலைத் தொடங்கப்போவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பை முழுமையாக ஒடுக்கப்போவதாகச் சபதமேற்றுள்ள இஸ்ரேல், லெபனானில் உள்ள ஒரு முக்கியப் பாலத்தைத் தகர்த்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 முதல் இஸ்ரேலுக்கு ஆதரவாகத் களம் இறங்கிய ட்ரம்ப் நிர்வாகம், தற்போது உள்நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் ஈரானின் பதிலடித் தாக்குதல்களால் பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

வளைகுடா நாடுகளில் நிலவும் இப்பதற்றம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ளதால், அமெரிக்காவில் பெட்ரோல் விலையேற்றம் தேர்தலுக்கான சவாலாக உருவெடுத்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT