வறிய மாணவர்களுக்கு விசேட சலுகை; வெளியான அறிவிப்பு

நாடளுமன்றத்தில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு நேற்று (18) தெரிவித்தார்.

வறிய மாணவர்களுக்கு விசேட சலுகை; வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வறுமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு இலவச பருவகால பயணச்சீட்டுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டள்ளது.

இதனை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நாடளுமன்றத்தில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு நேற்று (18) தெரிவித்தார்.

“வறுமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு இலவச பருவகால பயணச்சீட்டுகளை வழங்க திட்டமிட்டள்ள அதேவேளை பணம் செலுத்தக் கூடியவர்கள் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கை செலுத்தினால் மீதியை வழங்க தயாராக உள்ளோம்.

அரசிடமிருந்து பெறப்படும் பெருந்தொகையான மானியத்தின் அடிப்படையிலேயே கல்விக்கடன் நடைமுறைப்படுத்தப்பட்டு, வருடத்துக்கு இரண்டு பில்லியன் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆனால் நிதி நெருக்கடி காரணமாக திறைசேரியால் அந்தப் பணத்தை வழங்க முடியாதுள்ளது. மாணவர் பேருந்து சேவையை இயக்குவதில் போக்குவரத்து சபைக்கும் தனியார் துறைக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பருவகால சீட்டுகளுக்கு அதிக மானியம் வழங்கும்போது, பேருந்துகளின் எண்ணிக்கை குறைவடையும். எனவே, இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.” என அமைச்சர் கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT