நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு

சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும் கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT