தங்கப் பவுணொன்றின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 761,647 ரூபாயாக காணப்படுகின்றது.

தங்கப் பவுணொன்றின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த சில தினங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருவதுடன், இன்று (20) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.  

இன்றைய தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 761,647 ரூபாயாக காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

24 கரட் தங்கம் ஒரு கிராமின் 26,870 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்று 214,950 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலையானது 24,640 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன்,  22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 197,050 ரூபாயாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,520 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,100 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் 208,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் விலையானது 191,400 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT