இடியுடன் கூடிய மழை - வெளியான அறிவிப்பு

சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே உள்ளது.

இடியுடன் கூடிய மழை - வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று (05) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மாகாணம் மற்றும் மன்னார் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று (05) நண்பகல் 12:12 மணிக்கு பலப்பிட்டிய, எல்பிட்டிய, மொரவக்க மற்றும் திஸ்ஸமஹாராமய ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT