கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது

தந்தை தங்களோடு மோசமாக நடந்து கொண்டதாலேயே அவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரிடம் மகன்கள் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர்  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரது இரு மகன்களும் அவர்களுக்கு உதவிய  அவர்களின் நண்பருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து மூவரும் கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தந்தை தங்களோடு மோசமாக நடந்து கொண்டதாலேயே அவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரிடம் மகன்கள் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 17 மற்றும் 19 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்திகள் இரண்டு அருகில் இருந்த குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கைதானவர்களை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ். கரம்பகம் எல்.ஆர். தோட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய சிவசோதி சிவகுமார் என்பவர் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டரை வருடங்களாக மனைவியை பிரிந்து தோட்டக் குடிசையிலேயே இவர் தனிமையில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT