கனடா செல்ல எதிர்பார்போருக்கு வெளியான தகவல்... கடுமையாகும் கட்டுப்பாடு!

கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த கனடாஅரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா செல்ல எதிர்பார்போருக்கு வெளியான தகவல்... கடுமையாகும் கட்டுப்பாடு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த கனடாஅரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டியில் கனடாவுக்குள் நுழையும் தற்காலிக பணியாளர்கள், மாணவர் விசாவில் வருவோருக்கு கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனை கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் பெருமளவிலான வருகையை நிவர்த்தி செய்வதற்கான சீர்திருத்தங்களை வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார்.

கனடாவின் வீட்டு நெருக்கடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பெருமளவிலான வருகைக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்காலிக பணியாளர்கள் அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு பணிக்கான அனுமதியைப் பெறும் வெளிநாட்டு மாணவர்கள் போன்ற பல்வேறு வழிகளில் கனடாவில் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நுழைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவில் தற்போது 40.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிப்பதுடன், அவர்களில் 313,000 பேர் அங்கு குடியேறியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT