இன்று மழை அதிகமாக பெய்யும் பிரதேசங்கள் இவைதான்.. வானிலை தொடர்பில் எச்சரிக்கை

இன்று (27) அதிகாலை 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும்.

இன்று மழை அதிகமாக பெய்யும் பிரதேசங்கள் இவைதான்.. வானிலை தொடர்பில் எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள்  மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

 சிவப்பு எச்சரிக்கை

இதேவேளை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்த 24 மணிநேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (27) அதிகாலை 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அரபிக்கடலில் செயற்படும் நெடுநாள் படகு மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரையும் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும்,  திணைக்களம் அறிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT