குணப்படுத்தும் பூஜையில் பெண் உயிரிழப்பு

பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மஞ்சள் திரவத்தை குடிக்க வைத்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குணப்படுத்தும் பூஜையில் பெண் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

குணப்படுத்தும் பூஜையின் போது சுகவீனமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று லக்கல, தஸ்கிரிய, ஹத்தோட்டமுன பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் (16) மாலை முதல் நேற்று (17) காலை வரை இந்த பூஜை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

லக்கல, தஸ்கிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், சுகவீனமுற்றிருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரைக் குணப்படுத்தும் பூஜை நடைபெற்றது.

இதன்போது பூஜை செய்தவர் மூவருக்கும் தலா 21 இளநீரை அவ்வப்போது கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவ்வாறு செய்யும்போது, ​​பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மஞ்சள் திரவத்தை குடிக்க வைத்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தாஸ்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை இன்று (18) தம்புள்ளை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT