15ஆம் திகதி வரை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்பட உள்ளது.

15ஆம் திகதி வரை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்பட உள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று(06) நண்பகல் 12.12 அளவில் லெல்லோப்பிட்டி, பலாங்கொடை, புலத்சிங்கள, கல்தோட்டை மற்றும் வாத்துவை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, நேற்று (05) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை, மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT