வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வெப்பநிலை அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும்,  மொனராகலை மாவட்டத்திலும் வெப்பநிலை அதிகரிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, வடமத்திய , கிழக்கு மற்றும் ஊவா   மாகாணங்களின் பல  இடங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் அம்பாறை மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT