நடிகர் அஜித்துடன் மீண்டும் இணைந்த அர்ஜுன்.. ரசிகர்கள் உற்சாகம்!

அஜித் கதாநாயகனாக நடிக்க இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'.  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

நடிகர் அஜித்துடன் மீண்டும் இணைந்த அர்ஜுன்.. ரசிகர்கள் உற்சாகம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

அஜித் கதாநாயகனாக நடிக்க இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'.  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'விடாமுயற்சி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து நடிகர் அஜித் சென்னை திரும்பினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பின்னர் மீண்டும் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றார். அப்போது அஜித்துடன் நடிகை திரிஷாவும் சென்றார். இதன் மூலம் திரிஷா இந்த படத்தில் நடிப்பது உறிதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, நடிகர் ஆரவ் தனது சமூக வலைதளத்தில் அஜித் மற்றும் அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அர்ஜுன் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு அஜித்- அர்ஜுன் கூட்டணியில் 'மங்காத்தா' திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT