சிரிலிய சவிய நிதி முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை ஒக்டோபர் 13 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, அரச வங்கியில் 100 இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய கிரிஷ் நிதி முறைகேடு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியலை எதிர்வரும் அக்டோபர் 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் வருமானத்துக்காக சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதால் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
புத்தளத்தில் ஒரு பிரதிக்கு 850 ரூபாய் அறவிட்ட கடை மீது நுகர்வோர் விவகார அதிகார சபை திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 07 ஊழியர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக இடமாற்றப்பட்டுள்ளனர்.
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கின் இறுதித் தீர்ப்பு புதுக்கடை மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தெஹிவளையில் தயாரிக்கப்பட்டு 'மேட் இன் சைனா' என போலியாக லேபிளிடப்பட்ட சுமார் 1,000 சோடி பாதணிகளை நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் நுகர்வோரை ஏமாற்றும் நோக்கில் பிரபல ஆடை விற்பனை நிலையத்திற்கு இவை விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான தாய்லாந்து விசா இல்லா அனுமதி, செப்டம்பர் 15 முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், பயணிகள் முன்கூட்டியே இணையவழியில் விசா பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மின்சார வாகனங்களுக்கான பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சாரதி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொல்கொல்ல திரையரங்கு கொள்வனவு மோசடி விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கைதிகளின் அமைதியின்மையின்போது சிறை வைத்தியசாலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராமோட்டரை இயக்கிய கொலம்பிய நாட்டைச் சேர்ந்த விமானி உயிர் தப்பியுள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவரது இறுதிச் சடங்குகள் ஜூலை 20ஆம் திகதி பொலிஸ் உயரிய மரியாதைகளுடன் நடைபெறவுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 36ஆவது நாளில் மேலும் 6 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 437 என்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 428 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தின் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை 2026 முதல் காலாண்டில் 18.5% உயர்ந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் விற்பனை நடவடிக்கைகள் 15.2% குறைந்துள்ளதால், சந்தையில் விலை ஏற்றத்துடன் வாங்குபவர்களின் மந்தநிலையும் வெளிப்படுகிறது.