நத்தார் மற்றும் புதுவருட விடுமுறையை முன்னிட்டு ஐரோப்பாவிலுள்ள அமெரிக்கப் பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் திடீரெனத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதும், உலகளவில் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதும் பொதுமக்களிடையே பெரும் பீதியையும், இதுவொரு பாரிய சைபர் தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏழு நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
கன்சாஸ் மாநிலம் விசிட்டாவில் உள்ள ஸ்ட்ரைக்கர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இளையோர் கால்பந்து கால்பந்து ஆட்டத்துக்கு இடையில் லொறி புகுந்ததில் ஆறு வயது சிறுவன் மற்றும் 35 வயது ஆண் உயிரிழந்தனர், மேலும் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அமெரிக்காவின் ஓரிகன் மாநிலம் பெண்ட் நகரில் உள்ள சில்வர் ரெயில் தொடக்கப்பள்ளியில் 16 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியை உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர் அங்கிருந்த பொதுமக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்கா அச்சுறுத்தல்களை நிறுத்தினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும், அனுமதியின்றி நுழையும் கப்பல்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
13 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியா தற்போது மீண்டும் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இக்குழுவின் தலைவரான அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, அமெரிக்காவின் புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தல், அந்த நாட்டின் விரக்தியின் வெளிப்பாடாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பணிய மறுத்ததை ஈரான் தனது வெற்றியாகக் கருதுகிறது
விலைவாசி உயர்வு, மத்திய கிழக்குப் போர் மற்றும் அதிகருக்கும் அரசாங்கச் செலவு ஆகியவை முதலீட்டாளர்களுக்கு அச்சம் தருகின்றன.
அமெரிக்காவின் ஆக்டன் (Acton) பகுதியில் வசித்து வந்த அர்ஜுன் அரவிந்த் (வயது 17) என்ற சிறுவன், தனது தாய் சுதா வெங்கடேசன் (வயது 45) மற்றும் அவரது 14 வயது தம்பி சித்தார்த் அரவிந்த் ஆகியோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போரில் வெற்றி பெற்ற பின்னர் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் பிரதேசமாக அறிவிக்கப்போவதாக கூறியுள்ளார். இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2010-க்குப் பிறகு முதன்முறையாக ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா, ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் நடைபெறும் இந்த மரண தண்டனைகள், படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களுக்காக விதிக்கப்பட்டவையாகும்.
2025-ஆம் ஆண்டுக்கான உலகின் அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. சராசரி ஆண்டு ஊதியம் $131,416 (சுமார் ரூ.1.1 கோடி) என சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து லக்ஸம்பர்க் ($108,672) மற்றும் அமெரிக்கா ($105,482) உள்ளன.
"நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், எங்கள் மீது நடத்தப்படும் எந்தவோர் ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம்" என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பேஸெஷ்கியான், அமெரிக்காவுடனான இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரலாற்றுச் சாதனை எனப் பாராட்டியுள்ளார். பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைதி கிடைக்கும் என அவர் வலியுறுத்தினார்.