வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக மீட்பு

குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியர், அவரின் மகன், மகனின் மனைவி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த வீட்டில் இருந்து 39 வயதுடைய கணவனும், 37 வயதுடைய மனைவியும் நேற்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அந்த அறையில் இரண்டு கிருமி நாசினிப் போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் தந்தையான ஓய்வுபெற்ற ஆசிரியர் நேற்று மாலை அதே வீட்டில் உள்ள மரமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மகன் மற்றும் மருமகள் இறந்த துயரத்தால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலங்கள் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உடற்கூற்றுப் பரிசோதனை இன்று காலை இடம்பெறவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT