பிரான்ஸில் சிறுமிகள் மீது கத்திக் குத்து - சந்தேக நபர் கைது

பிரான்ஸில் சிறுமிகள் மீது கத்திக் குத்துத் தாக்குதல் - சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் சிறுமிகள் மீது கத்திக் குத்து - சந்தேக நபர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரான்ஸில் சிறுமிகள் மீது கத்திக் குத்துத் தாக்குதல் - சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் ஒரு பாடசாலைக்கு அருகே நடத்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 6 வயது, 11 வயதுச் சிறுமிகள் இருவர் காயமடைந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

11 வயதுச் சிறுமியை Souffelweyersheim நகரில் இருக்கும் பாடசாலைக்கு வெளியே நபர் ஒருவர் தாக்கினார். அத்துடன், 6 வயதுச் சிறுமியை அதே நபர் வேறோர் இடத்தில் தாக்கினார்.

இந்த நிலையில், சிறுமிகளைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  அவர் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் சிறுமிகளுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன. தாக்குதலை நடத்திய நபருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்று பொலிஸார் கூறினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது சிறுமிகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT