ஹோட்டல் அறையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு

பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு, நபர் ஒருவர்  பொத்துவில் பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோட்டல் அறையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு, நபர் ஒருவர்  பொத்துவில் பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அறுகம்பை பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பெண் ஒருவரே நேற்று (12) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மஹகலுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண், ஆண் ஒருவருடன் ஹோட்டல் அறைக்கு வந்திருந்த நிலையில், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த முகாமையாளர் அறுகம்பை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்து அறையின் கதவை உடைத்து திறந்துள்ளனர்.

இதன்போது, குறித்த அறையில் பெண் ஒருவர் இரத்த வௌ்ளத்துடன் சடலமாக காணப்பட்டதாகவும், சந்தேகநபர் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -