நாடு முழுவதும் மழை நிலை தொடரும் - காலை வேளையிலும் மழை

நாடு முழுவதும் தற்போது பெய்து வரும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாடு முழுவதும் மழை நிலை தொடரும் - காலை வேளையிலும் மழை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாடு முழுவதும் தற்போது பெய்து வரும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று(14) மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழைவீழ்சச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்குக் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இடியுடன் கூடிய மழை வேளையில் ஏற்படக் கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT