இன்றும் பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

இன்றும் பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை
ADVERTISEMENT
ADVERTISEMENT

தென்மேற்கு பருவமழை காரணமாக, தற்போதுள்ள மழை மற்றும் காற்றின் நிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மி.மீ. 100க்கும் மேற்பட்ட கனமழை பெய்யும்.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு எல்லைகளில் வடக்கு, வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்றானது 50-60 கி.மீ.  வரை பலத்த காற்று வீசக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 11,792 குடும்பங்களைச் சேர்ந்த 44,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

20 மாவட்டங்களில் 205 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் திரு.பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT