நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் அடை மழை

மேற்கு, சப்ரகமுவ வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் அடை மழை
ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இன்று(12) பல தடவை மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என  திணைக்களம் கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேற்கு, சப்ரகமுவ வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT