ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விரும்பிய வாழ்க்கை கிடைத்ததா? இளவரசர் ஹரி – மேகன் தம்பதியின் புதிய வாழ்க்கை குறித்து தகவல்

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தம்பதியினர் அரச குடும்பத்திலிருந்து விலகிய ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், தங்களுக்கான தனிப்பட்ட வாழ்க்கை முறையை உருவாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விரும்பிய வாழ்க்கை கிடைத்ததா? இளவரசர் ஹரி – மேகன் தம்பதியின் புதிய வாழ்க்கை குறித்து தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து விலகி ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர் தாங்கள் விரும்பிய அமைதியான வாழ்க்கை முறையை உருவாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வ பொறுப்புகளிலிருந்து விலகிய பின்னர், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இந்தத் தம்பதியினர், தற்போது தங்களுக்கென ஒரு புதிய வாழ்க்கை முறையை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நியூயோர்க் டைம்ஸ் இதழில் கர்லா ஆடம்ஸ் எழுதிய கட்டுரையில், ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியான நடைமுறையைப் பின்பற்றி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் வசிக்கும் இடம் குறித்து பொதுவெளியில் தகவல்களை வெளியிடாததுடன், தங்களுடைய பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைகள் பற்றிய விபரங்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்றும் கோரியுள்ளதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இருப்பினும், இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட்ஸ் (Cotswolds) பகுதியில் உள்ள மதுபான விடுதிகளில் இந்தத் தம்பதியினர் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம், மேகன் மார்க்கல் தனது வர்த்தக நடவடிக்கைகளையும் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார்.

அவர் உருவாக்கியுள்ள 'As Ever' என்ற வாழ்க்கைமுறை வர்த்தகப் பெயரை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதுடன், 'Junior MasterChef Australia' நிகழ்ச்சியில் விருந்தினர் நடுவராகப் பங்கேற்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் தற்போது தங்களுக்கென உருவாக்கியுள்ள வாழ்க்கை முறையைப் பற்றி அரச குடும்ப விவகாரங்களை எழுதும் கேட்டி நிக்கோல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

'The Royals Uncensored' என்ற போட்காஸ்டில் பேசிய அவர், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தம்பதியினர் விரும்பிய அரை அரச குடும்பப் பொறுப்பு மற்றும் அரை தனிப்பட்ட வாழ்க்கை என்ற நடைமுறையை தற்போது உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு இளவரசர் ஹரி, தனது மனைவி மேகன் மார்க்கல் மற்றும் மகன் இளவரசர் ஆர்ச்சியுடன் பிரித்தானிய அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வ பொறுப்புகளிலிருந்து விலகினார்.

அதனைத் தொடர்ந்து அரச குடும்பத்துடனான தங்களது அனுபவங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் இந்தத் தம்பதியினர் தொலைக்காட்சி நேர்காணல்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் வெளிப்படையாகப் பேசியிருந்தனர்.

தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் ஹரி – மேகன் தம்பதியினருக்கு இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT