அவ்வப்போது மழை - அடுத்த 24 மணிநேர வானிலை தொடர்பில் அறிவிப்பு

நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வப்போது மழை - அடுத்த 24 மணிநேர வானிலை தொடர்பில் அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (28) அதிகாலை 3.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் செயற்படும் பல நாள் மீன்பிடி மற்றும் கடற்தொழிலாளர் சமூகம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டுமென திணைக்களம் குறிப்பிடுகிறது.

இதேவேளை, சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இன்று (28) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

மற்ற பகுதிகளில் அவ்வப்போது  30-40 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT