அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு

அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள்: அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது செலுத்தப்படாமல் இருந்த அனைத்து நிலுவைகளை செலுத்துவதற்கு திறைசேரி நடவடிக்கை

அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஷெஹான் சேமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதயும் படிங்க: பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்

“அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை இதுவரை பெறாத, பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் விண்ணப்பங்களை கோருவோம் என நம்புகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது செலுத்தப்படாமல் இருந்த அனைத்து நிலுவைகளை செலுத்துவதற்கு திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்டணங்களும் கடந்த ஆண்டு டிசெம்பர் 15ஆம் திகதிக்குள் செலுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். (News21)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT