தோனியால மட்டும் எப்படி ஐசிசி கோப்பையை வெல்ல முடிகிறது? அஸ்வின் விளக்கம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 9வது முறையாக ஐசிசி கோப்பையை இந்திய அணி தவறவிட்டுள்ளது. 

தோனியால மட்டும் எப்படி ஐசிசி கோப்பையை வெல்ல முடிகிறது? அஸ்வின் விளக்கம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 9வது முறையாக ஐசிசி கோப்பையை இந்திய அணி தவறவிட்டுள்ளது. 

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து அஸ்வின் பேசியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். அதேபோல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்ல முடியாதது ரசிகர்களுக்கு நிச்சயம் விரக்தியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கும். 

அதனை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உடனடியாக இந்திய அணியில் இருந்து சில வீரர்களை நீக்க வேண்டும் என்று சொல்வது நியாயமல்ல. ஏனென்றால் வீரர்களின் ஆட்டம் ஒருநாள் இரவில் மாறாது.

அதேபோல் இந்திய அணியின் தோல்விக்கு பின் எம்எஸ் தோனியின் கேப்டன்சி குறித்த பேச்சுகள் அதிகமாகியது. தோனியை போன்ற ஒரு கேப்டன் கிடைக்க மாட்டார் என்று பலரும் பேசினார்கள். தோனி என்ன செய்தார் தெரியுமா? அவர் அனைத்து விஷயங்களையும் எளிதாக மாற்றிக் கொண்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

நான் எம்எஸ் தோனியின் கேப்டன்சிக்கு கீழ் ஆடிய போது, ஒன்றை மட்டும் நன்றாக கவனித்திருக்கிறேன். அவர் வழக்கமாக 15 பேர் கொண்டு இந்திய அணியை தேர்வு செய்வார்.

அந்த 15 பேர் கொண்ட அணியே ஒரு ஆண்டுக்கு தொடர்ச்சியாக விளையாடும். ஒவ்வொரு வீரருக்கும் பாதுகாப்பான சூழலை தோனியால் கொண்டு வர முடிந்தது.

ஒரு வீரரை தேர்வு செய்து, இதுதான் உன் வேலை என்று ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் போது, நிச்சயமாக அந்த விளையாட்டு வீரர் ஒவ்வொரு போட்டிக்கும் மேம்பட்டு கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிப்பார். அதனைதான் தோனி தொடர்ச்சியாக செய்தார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT