சென்னை வந்தடைந்தார் 'தல' தோனி: ஐபிஎல் 2026-க்காக சிஎஸ்கே முகாம் அதிரடித் தொடக்கம்!

உலகக் கோப்பை தொடரில் விளையாடாத வீரர்கள் முன்னதாகவே தங்களது அணி முகாம்களில் இணைந்து வரும் நிலையில், தோனி நேற்று (பிப்ரவரி 28) சென்னை வந்தடைந்தார்.

சென்னை வந்தடைந்தார் 'தல' தோனி: ஐபிஎல் 2026-க்காக சிஎஸ்கே முகாம் அதிரடித் தொடக்கம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐபிஎல் 2026 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பயிற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி சென்னை வந்தடைந்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கையில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், மார்ச் 28-ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

உலகக் கோப்பை தொடரில் விளையாடாத வீரர்கள் முன்னதாகவே தங்களது அணி முகாம்களில் இணைந்து வரும் நிலையில், தோனி நேற்று (பிப்ரவரி 28) சென்னை வந்தடைந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவரைத் தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்ட சர்ப்ராஸ் கான் மற்றும் ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோரும் சென்னை அணி முகாமில் இணைந்துள்ளனர்.

தோனி விமான நிலையத்திலிருந்து வெளியேறும் மாஸான வீடியோவை சென்னை அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. "ஹெலிகாப்டர் சென்னையில் தரையிறங்கிவிட்டது" என்ற கேப்ஷனுடன் வெளியான இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT