டிக்கெட் வாங்க அதிகாலை முதல் அலைமோதும் இலங்கை ரசிகர்கள்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடக்கின்றது.

டிக்கெட் வாங்க அதிகாலை முதல் அலைமோதும் இலங்கை ரசிகர்கள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடக்கின்றது.

இந்த நிலையில், போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாரிய வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கும் இலங்கை அணி, டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று உள்ளூர் நேரப்படி இரவு 07.00 மணிக்கு எதிர்கொள்கிறது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சில டிக்கெட்டுகள் கிடைக்கும் என அறிவித்ததையடுத்து, போட்டியை பார்வையிட டிக்கெட்டுகளை வாங்குவதற்காக தம்புள்ளை மைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்கின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்கள் இன்று அதிகாலை 03.00 மணி முதலே வரிசையில் நின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT