கடத்தப்பட்ட 125 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் பறிமுதல்

புத்தளம், பெரியபாடு கடற்கரைப் பகுதியில் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கடத்தப்பட்ட 125 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடத்தப்பட்ட 125 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் பறிமுதல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட சுமார் 125 கிலோகிராம் பீடி இலைகள், புத்தளம், பெரியபாடு கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடலோரக் காவல்படையின் ஒத்துழைப்புடன், வடமேற்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட தம்பபண்ணி கடற்படை முகாம் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை இந்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சந்தேகத்துக்கிடமான மூன்று சாக்கு மூட்டைகள் கடற்படையினரால் அவதானிக்கப்பட்டு, சோதனையிடப்பட்டன. அதன்போதே பொதி செய்யப்பட்டிருந்த இந்த பீடி இலைத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படையினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகள் காரணமாகவே கடத்தல்காரர்கள் இந்த பீடி இலை மூட்டைகளைக் கடற்கரையில் கைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் சுங்கத் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT