களுத்துறை அகலவத்தையில் மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு: சகோதரன் காயம்

களுத்துறை அகலவத்தை பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை அகலவத்தையில் மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு: சகோதரன் காயம்
AI உருவாக்கிய மாதிரிப்படம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

களுத்துறை, அகலவத்தை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரன் காயமடைந்துள்ளார்.

நேற்று மாலை 6.15 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மின்னல் தாக்கிய அதிர்வில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு, கட்டிலுக்கு அடியில் விழுந்து கிடந்த நிலையில் அவரது தாயாரால் மீட்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் இந்த மின்னல் தாக்கத்தின் போது அருகிலிருந்த அவரது சகோதரனும் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியதில், அவரது கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT