அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு

56 வயதான மொஜ்தபா காமேனியை ஈரானின் மதகுருமார்கள் கொண்ட நிபுணர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அவரது தந்தையின் வாரிசாக தேர்வு செய்தது.
அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு

ஈரான் நாட்டின் உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தந்தையும் ஈரானின் நீண்டகால உச்ச தலைவருமான அயதுல்லா அலி காமேனி , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த நியமனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

56 வயதான மொஜ்தபா காமேனியை ஈரானின் மதகுருமார்கள் கொண்ட நிபுணர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அவரது தந்தையின் வாரிசாக தேர்வு செய்தது. ஈரானின் 47 ஆண்டுகளான வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முக்கிய அரசியல் தலைவர்கள், சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் ஆயுதப்படைகள் ஆகியவை புதிய தலைவருக்கு தங்களின் ஆதரவை உடனடியாக தெரிவித்துள்ளன.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், இந்த நியமனம் நாட்டிற்கு “மரியாதையும் வலிமையும் நிறைந்த புதிய காலத்தை” தொடங்குகிறது என்று கூறினார். இது தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்தும் தீர்மானமாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சிகூட புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து, நாட்டின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை காக்க எந்த நேரமும் பின்வாங்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி, புதிய உச்ச தலைவரைச் சுற்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் சாதிக் லாரிஜானி தலைமையிலான எக்ஸ்பிடென்சி கவுன்சிலும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத் தலைவர்முகமது பாகர் கலிபாஃப், புதிய தலைவரை பின்பற்றுவது ஒரு தேசிய கடமை எனக் குறிப்பிட்டார்.

மொஜ்தபா காமேனி இதற்கு முன்பு எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. ஆனால் நீண்டகாலமாக தனது தந்தையின் உள்சுற்றத்தில் முக்கிய செல்வாக்கு கொண்டவராக இருந்து, குறிப்பாக ஐஆர்ஜிசி அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்தவர் எனக் கூறப்படுகிறது.

அண்மைக் காலங்களில், 1989 முதல் ஆட்சியில் இருந்த தனது தந்தைக்கு பதிலாக அவர் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நியமனம் ஈரானில் கடுமையான அரசியல் அணிகள் இன்னும் அதிகாரத்தில் தொடரும் சாத்தியத்தை காட்டுகிறது என்றும், தற்போதைய போர்நிலையால் குறுகிய காலத்தில் எந்த சமாதான பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர