உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

பரீட்சை நிலையங்களில் எந்த தடையும் இல்லாமல், எந்த பிரச்சினையும் இல்லாமல் மாணவர்கள் பரீட்சை எழுத முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (02) கருத்து தெரிவித்த அவர் ஜனவரி 04ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் 25 மாவட்டங்களில் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு எவ்வித தடைகளும் இன்றி  வருவதை உறுதிப்படுத்த பேரிடர் முகாமைத்துவம், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக  அவர் கூறினார்.

அத்துடன், பரீட்சை நிலையங்களில் எந்த தடையும் இல்லாமல், எந்த பிரச்சினையும் இல்லாமல் மாணவர்கள் பரீட்சை எழுத முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,298 பரீட்சை  நிலையங்களில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT