இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 5 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே உள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய வானிலை 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (07) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்மாபாறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இடியுடன் கூடிய மழை  மற்றும் தற்காலிக பலத்த காற்று, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 5 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே உள்ளது.

இதனால், இன்று (07) நண்பகல் 12:12 மணிக்கு கடவத்தை, பதுளை, லுனுகல, கொங்கஸ்பிட்டிய, பக்திதியாவ மற்றும் கொத்மலை ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுப்பும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT