கிணறில் இருந்து கிடைத்த ஐம்பொன் கருடாழ்வார் சிலை

சுமார் 50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றை தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில், கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். 

கிணறில் இருந்து கிடைத்த ஐம்பொன் கருடாழ்வார் சிலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நெல்லை, மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அரியகுளம் பஞ்சாயத்து அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஊர் பொதுக்கிணற்றில் இருந்து சுமார் 1½ அடி உயரம் கொண்ட ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலை கண்டெடுக்கப்பட்டது. 

சுமார் 50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றை தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில், கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

தொடர்ந்து கிணற்றின் அடியில் உள்ள சகதியை அப்புறப்படுத்திய நிலையில், கிணற்றின் அடியில் கிடந்த சுமார் 1½ அடி உயரம் கொண்ட ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலை கண்டெடுக்கப்பட்டது. 

மிகவும் பழமை வாய்ந்த இந்த சிலை குறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஐம்பொன் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பழங்கால ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலை எப்படி அந்த கிணற்றுக்குள் வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT