கொரோனாவுக்கு பின்னர் தொற்றுகள் அதிகரிப்பு: மருத்துவர் வெளியிட்ட தகவல்!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுகளால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், கோடிக்கணக்கானோருக்கு தொற்று ஏற்பட்டது. 

கொரோனாவுக்கு பின்னர் தொற்றுகள் அதிகரிப்பு: மருத்துவர் வெளியிட்ட தகவல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுகளால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், கோடிக்கணக்கானோருக்கு தொற்று ஏற்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், “கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மற்றும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின், நோயெதிர்ப்பு சக்தி மக்களிடையே குறைந்து காணப்படுகிறது” என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷில்பா சர்மா தெரிவித்து உள்ளார்.

தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள மக்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து போன நிலையை எதிர்கொண்டுள்ளனர். இதனால், வைரஸ் தொற்றுகள், சளி தொற்று ஆகியவை அதிகரித்து உள்ளது. இது 3 முதல் 4 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலையும் உள்ளது என கூறியுள்ளார்.

குடல்வால் அழற்சி, பித்தப்பை அழற்சி, அழற்சி நிலைமைகள் போன்றவை அதிகரித்து உள்ளது. இதனால், தோல் அரிப்புகள் போன்ற பல ஒவ்வாமைகளும் ஏற்பட்டு உள்ளன என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

நீரிழப்பால், உறைதல் ஏற்படுவதும் அதிகரித்து உள்ளது. நீங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது திடீரென மாரடைப்பு ஏற்படும் செய்திகளை கேட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார். (தின தந்தி)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT