நாட்டின் சில இடங்களில் கனமழை - காற்று தொடர்பில் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகலாம்.

நாட்டின் சில இடங்களில் கனமழை - காற்று தொடர்பில் எச்சரிக்கை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 

ஏனைய பகுதிகளில், அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT